திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் பரமக்குடி, காவனூர், கிழக்கு தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் (29). என்பவர் ஒரு வீடியோவை பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்ததையடுத்து நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், மங்கையர்கரசி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, வீடியோவை வெளியிட்ட ராமச்சந்திரனை (27.10.2024) அன்று கைது செய்தார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே எச்சரிக்கை படுத்தியுள்ளதை குறிப்பிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்