திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர் மேல பிள்ளையார்குளம், கஸ்பாதெருவை சேர்ந்த கார்த்திக், (19). சமூக வலைதளமான Instagram-யில் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். இது குறித்து மானூர் காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்ததையடுத்து மானூர் உதவி ஆய்வாளர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இரு தரப்பினரிடையே பிரச்சனையை தூண்டும் விதமாக வீடியோவை வெளியிட்ட கார்த்திக்கை (19.10.2024) இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்