அரியலூர் : அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை சமூக நீதி & மனித உரிமைகள் பிரிவு இணைந்து நடத்தும் “ஒன்றிணைவோம்” என்ற மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் திரு.பொ.இரத்தினசாமி இ.ஆ.ப., அவர்கள், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்கள் கலந்து கொண்டனர் சமூக நீதியை நிலை நாட்டுவதில் மாணவர்களின் பங்கு என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்கள்.