திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன் .இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு சென்று மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். அதில் ஒன்றாக (14.11.2024) அன்று ஜெபராஜ், துணை காவல் கண்காணிப்பாளர், (SJHR) நாங்குநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பார்த்திபன், மற்றும் ஆசிரியர்கள் இணைந்து நாங்குநேரி சங்கர் ரெட்டியார் உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சமூக நல்லிணக்கம் குறித்தும், மனித உரிமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும் துணை காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், ஜாதி, மத அடையாளங்களை அணிந்து பள்ளிகள் மற்றும் பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும், மாணவ, மாணவிகளுக்கு சமூக நல்லிணக்கம் பற்றியும், போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான வன்முறைகள், ஆபத்து காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய பாதுகாப்பு உதவி எண்கள் 181,1098 மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்