பெரியகுளம் உட்கோட்டம் ஜெயமங்கலம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பொம்மிநாயக்கன்பட்டி கிராம பகுதியில் பெரியகுளம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.K.முத்துகுமார் அவர்கள் மற்றும் உட்கோட்ட காவல்துறையினர் இணைந்து சமூக ஒற்றுமையை மேம்படுத்துதல் மற்றும் கிராமப்புற சாதனையாளர்களை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை தலைமையேற்று துவக்கி வைத்து பேசிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் கிராமத்தில் நடக்கக்கூடிய முக்கிய திருவிழா நிகழ்ச்சிகள், சட்டவிரோத செயல்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பெண்களுக்கெதிரான குற்றங்கள், குழந்தை திருமணம், திருட்டு மற்றும்
குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பற்றிய தகவல்கள், போதை பொருட்கள், மதுபானம், கஞ்சா பதுக்கும் நபர்கள், விற்பனை செய்பவர்களை பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும்.
என்றும்,பொதுமக்களும் உரிய தகவல்களை காலதாமதமின்றி தெரிவிக்கும் பட்சத்தில், குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் இதன்மூலம் மேற்படி குற்றச் செயல்கள் சமுதாயத்தில் முற்றிலும் தடுக்க வழிவகையாக இருக்கும்.
பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று எடுத்துக் கூறியும், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கூறி விழிப்புணர்வு வழங்கியும்,
பள்ளி மாணவ செல்வங்களின் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தார்.
மேலும் கிராமப்புற சாதனையாளர்களும் மற்றும் பள்ளி மாணவ செல்வங்களும் நினைவு பரிசு, நற்சான்றிதழ் வழங்கி தங்களுடைய பணி சிறக்க தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திரு.P.K.ராஜேந்திரன்(ADSP-HQ), மற்றும் முக்கியஸ்தர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.