கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கடலூர் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் திருமதி.P.தீபா அவர்கள் தலைமையில் நெல்லிக்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருகண்டேஸ்வரம் கிராமத்தில் கடலூர் தூயவளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்திய NSS Camp-ல் சாதி வேற்றுமையை கலைந்து ஒற்றுமையை வளர்ப்பதற்காகவும், வன்கொடுமையால் ஏற்படும் சட்டரீதியான பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. மேலும், கல்வி மேன்மை மற்றும் விழிப்புணர்வு பற்றியும் அரசாங்க நலத்திட்ட உதவிகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. செல்போன் பயன்படுத்தும் முறையினை பற்றியும் போதைப்பொருட்கள் பயன்படுத்த கூடாது என்றும் விழிப்புணர்வில் எடுத்துரைக்கப்பட்டது.