திருநெல்வேலி: அண்ணல் அம்பேத்காரின் பிறந்த நாளை முன்னிட்டு “சமத்துவ நாள்” உறுதிமொழி (11.04.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., தலைமையில் காவல்துறையினரால் எடுத்து கொள்ளப்பட்டது. நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்