கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விஜய் என்பவர் கோலட்டி கிராமத்தில் உள்ளJVK ஆர்கானிக் பாம்மில் மேனேஜராக பணிபுரிந்து வருவதாகவும் (24.10.2025) ஆம் தேதி மாலை சுமார் 5.30 மணிக்கு பாம்மில் உள்ளே படுக்கச் சென்று மறுநாள் காலை சுமார் 09.00 மணியளவில் மெயின் கேட்டுக்கு வந்து பார்த்தபோது மெயின் கேட்டு அருகே இருந்த சந்தன மரம் அறுக்கப்பட்டு காணவில்லை எனவும் சுற்றி பார்த்த போது நான்கு சந்தன மரங்களை வெட்டப்பட்டு அங்கேயே இருந்ததாகவும் சந்தன மரத்தை திருடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி விஜய் அவர்கள் (13.11.2025) ஆம் தேதி தேன்கனிக்கோட்டை காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து சந்தன மரத்தை திருடிய நான்கு நபர்களில் ஒரு நபரை கைது செய்து அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















