திருச்சி : திருச்சி மாவட்டம், கொள்ளிடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அய்யன் வாய்க்கால்கரை வாழவந்தான்புரம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட சரத்குமார் என்பவரையும். இதே போன்று சமயபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட புள்ளம்பாடி வாய்க்கால் அருகே தள்ளுவண்டி கடை ஒன்றில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட ராபர்ட் மற்றும் முத்தமிழ்செல்வன் என்பவர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து விற்பனை செய்வதற்காக வைத்த 29(19+10) மது பாட்டில்களை கைப்பற்றி மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.