திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் (14.11.2024) ஆம் தேதி காவல் உதவி ஆய்வாளர் அன்னராஜா மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது பாளை மார்க்கெட் வண்டி பேட்டை இறக்கம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பாளை சாந்தி நகர் 3-வது தெருவை சேர்ந்த சக்திவேல் மகன் சந்திரசேகர் (21). என்பவரிடமிருந்து 154 மது பாட்டில்கள் மற்றும் ரூ 900/- ஆகியவற்றை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்ப்படுத்தினார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்