திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் (01.05.2025) அன்று பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர், மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேலப்பாளையம் வீரமாணிக்கப்புரம் மேலத்தெருவை சேர்ந்த செல்லதுரை மகன் சந்திரபாபு என்ற பாபுவை (41). சோதனை செய்ததில் சுமார் 720 மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர், கோமதி சங்கர் அவரை கைது செய்து அவரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 720 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்