கன்னியாகுமரி: சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக மதுபானங்கள் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். உத்தரவின்படி கன்னியாகுமரி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைகுளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அரசு மதுபானங்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
தென்தாமரைகுளம் காவல் நிலைய போலீசார் இலந்தையடிவிளை பகுதியை சேர்ந்த எமகாலபெருமாள் என்பவரது மகன் ஞான சுரேஷ், வயது (45). என்பவரது வீட்டில் சோதனை செய்த போது அவரது வீட்டில் 200 மது பாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
















