கிருஷ்ணகிரி: கந்திகுப்பம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது கிருஷ்ணகிரி To குப்பம் நெடுஞ்சாலையில் பசவண்ன கோயில் கிராமத்தில் அருகே உள்ள ஆதித்யா தாபா முன்புறம், பசவண்ன கோவில் To பர்கூர் ரோட்டில் ஒதிகுப்பம் பிரிவு சாலையில் மற்றும் பசவண்ன கோவில் To சிந்தகம்பள்ளி ரோட்டில் உள்ள பெட்டிக்கடையின் பின்புறம் ஆகிய மூன்று இடங்களில் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் நேரில் சென்று சோதனை செய்தபோது மூன்று இடங்களில் மதுபானங்கள் விற்பனை செய்து கொண்டிருந்த நபர்களில் ஒரு நபர் ஓடிவிட்டதாகவும் மற்ற இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மதுபானங்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து இரண்டு குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















