திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் பகுதியில் (02.02.2025) அன்று மதுவிலக்கு அமலாக்க பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுடலைமணி தலைமையில் காவல்துறையினர் ரோந்து சென்ற போது நயினார்குளம் அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இசக்கிபாண்டி (26). என்பவரிடமிருந்து 27 மது பாட்டில்களும், பெருமாள்புரம் பகுதியில் பெருமாள்புரம் காவல் உதவி ஆய்வாளர், கிருஷ்ணசாமி ரோந்து சென்ற போது மகிழ்ச்சி நகர் அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பாண்டிகுமார் (70). என்பவரிடமிருந்து 28 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்