கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு ரோந்து அலுவலில் இருந்தபோது பாகலூர் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள ஏரியில் மண் திருடுவதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு சென்ற போது மண் எடுத்துக்கொண்டு இருந்த நபர்கள் அரசு அதிகாரிகளை பார்த்ததும் வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார்கள் எனவும் நிறுத்திய வாகனத்தை சோதனை செய்தபோது சுமார் 10 யூனிட் மண் இருந்தது, அனுமதியின்றி மண் கடத்த பயன்படுத்திய மூன்று வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வாகனத்தை ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.