கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது நாகொண்டப்பள்ளி கிராமத்தில் உள்ள ஏரியில் மண் எடுத்துக் கொண்டு வந்த வாகனத்தின் ஓட்டுநர் போலீசாரை பார்த்ததும் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார் எனவும் நிறுத்திய வாகனத்தை சோதனை செய்தபோது சுமார் 4 யூனிட் மண் இருந்தது, அனுமதியின்றி மண் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது .