மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் உட்கோட்டம், T.கல்லுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாமியப்பன் மருத்துவமனை அருகே புகையிலை, கூலிப் போன்ற போதை பொருட்கள் சட்ட விரோதமாக காரில் கடத்தி வந்து விற்பனை செய்வது சம்பந்தமாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பேரையூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் வில்லூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் பொறுப்பு T.கல்லுப்பட்டி அவர்களின் மேற்பார்வையில் பெண் உதவி ஆய்வாளர் திருமதி கவிதா அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இன்று அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் T.கல்லுப்பட்டி ராஜபாளையம் ரோட்டில் சாமியப்பன் மருத்துவமனை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியே வந்த TN 48 F 1433 Tata indigo Marina என்ற காரை நிறுத்தி தணிக்கை செய்த போது அந்த காரில் வந்த 1) சரவணகுமார் (60). த/பெ கந்தசாமி, நாடார் ஸ்ட்ரீட் வையூர் பேரையூர் 2)ஆறுமுகம் வயது (28). த/பெ கோவிந்தன், கல்யாணசுந்தரம் ரோடு ஆவரம்பட்டி ராஜபாளையம் தாலுகா விருதுநகர் மாவட்டம். ஆகியோர் சட்ட விரோதமாக சுமார் 56 கிலோகிராம் கணேஷ் புகையிலை மற்றும் கூலிப் போன்ற போதை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இது சம்மந்தமாக மேற்படி குற்றவாளிகள் மீது T.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சரவணக்குமார் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து மேற்படி புகையிலை போதை வஸ்துக்கள், அவற்றை விற்பனை செய்த பணம் ரூபாய் 41,212/- மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன . இச்சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணையில் மேற்படி குற்றவாளிகள் மேற்படி புகையிலை பொருட்களை சட்ட விரோதமாக சேலத்திலிருந்து வாங்கி வந்து மதுரை, விருதுநகர் மாவட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருவதாக தெரியவந்துள்ளது. மேலும் அடுத்த கட்ட விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக T.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் மேற்படி எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரி மற்றும் ஆளிநர்களுக்கு உயரதிகாரிகள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தார்கள். இனி வரும் காலங்களில் இது போன்று சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரித்து உள்ளார்கள். இது போன்று கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்க 91760-79100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். அதன் பேரில் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோடு, தகவல் தெரிவிப்போரின் விபரம் ரகசியம் காக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்
















