திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவம்பலபுரம், பஞ்சாயத்து அலுவலகத்திற்கு பின்னாள் சட்டவிரோதமாக பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக
காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு விரைந்த உதவி ஆய்வாளர் திரு. வினுகுமார் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர்
அப்பகுதியில் பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த மகரஜோதி
29, ஆறுமுகம் 28, முருகன் 36, பீர் முகமத 41, பசீர் 53, காசி மீரான்35, முகைதீன் 40, ஹனிபா 40. ஆகிய 8 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 9750 ரூபாய் பணத்தையும்,1 சீட்டு கட்டையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்