கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது B முதுகானப்பள்ளி கிராமத்தில் பாப்பையா என்பவரது தைலமர தோப்பில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போலீசார் சூதாடி கொண்டிருந்த ஐந்து நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுகட்டு,ஆறு இரு சக்கர வாகனங்கள்,₹6,490/- ரூபாய் பணம் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது .