கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அஞ்செட்டி மேற்கு VAO அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு ரோந்து அலுவலில் இருந்தபோது கடுகநத்தம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் கற்கள் மற்றும் மண்ணை வெட்டி எடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போது வாகனத்தின் ஓட்டுநர்கள் VAO அவர்களை பார்த்ததும் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்கள். அனுமதியின்றி கற்கள் மட்டும் மண்ணை கடத்த பயன்படுத்திய இரண்டு வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கொண்டு வந்து வாகனத்தை ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது
















