கிருஷ்ணகிரி: கந்திகுப்பம் காவல் நிலைய பகுதியான குருவிநாயனப்பள்ளி காவல் சோதனை சாவடியில் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது சுமார்100 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சா வைத்திருந்த மூன்று நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப் பதிந்து எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.