கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கெலமங்கலம் வருவாய் ஆய்வாளர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்த போது கெலமங்கலம் நான்கு ரோடு அருகில் வந்த வாகனத்தை நிறுத்திய போது வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடிவிட்டார் எனவும் நிறுத்திய வாகனத்தை சோதனை செய்ததில் சுமார் 2 யூனிட் உடைகற்கள் இருந்தது, அனுமதியின்றி உடைகற்கள் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கொண்டு வந்து வாகனத்தை ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.