திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட அரச மரத்து பட்டி பீட் அருகில் உள்ள பண்ணைப்பட்டி கோம்பையில் குணசீலன் என்பவரின் பட்டா நிலத்தில் தோதகத்தி மரங்களை அறுத்துக் கொண்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி மாவட்ட வன அலுவலர் நாக சதீஷ் கிடி ஜாலா அவர்களின் உத்தரவின் படி வனச்சரகர் குமரேசன் தலைமையிலான வன பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு மரங்களை அறுத்துக் கொண்டிருந்தவர்கள் மீது பெருமர குற்ற வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளான ராஜீவ் காந்தி, அன்வர், ராமர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் தலை மறைவு குற்றவாளிகளான குணசீலன், ரமேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















