திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் பேட்டை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பேட்டை நரிக்குறவர் காலனி பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற சுத்தமல்லி, வ.உ.சி. நகரைச் சேர்ந்த கோதர் ரபிக் (32). என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து 27 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்