திருநெல்வேலி : திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், கலை சந்தனமாரி தலைமையிலான காவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது, மது விற்பனையில் ஈடுபட்ட சந்திப்பு சி.என். கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மாரிமுத்து (39). என்பவரிடமிருந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். அதே போல பேட்டை மதுவிலக்கு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், முருகராஜ் தலைமையிலான காவலர்கள் ரோந்து சென்றபோது கருங்காடு ரயில்வே கேட் பகுதியில் மது விற்ற பேட்டை படையாட்சி தெருவைச் சேர்ந்த மாரிமுத்து (49). என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















