திருநெல்வேலி : திருநெல்வேலி பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நரிக்குறவர் காலனி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், அருள் செல்வம் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர், சுத்தமல்லியைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் செல்லப்பா (59). என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















