திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி காவல்நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கொண்டாநகரம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த பட்டன்கல்லூர் காலனி தெருவைச் சேர்ந்த லெட்சுமணபெருமாள் மகன் மாரிசெல்வம்(43). என்பவரை விசாரித்த போது அவர் விற்பனைக்காக சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் உதவி ஆய்வாளர், சினேகாந்த் மாரிசெல்வத்தை கைது செய்து அவரிடமிருந்து 29 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்