திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை வண்டிப்பேட்டை இறக்கம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் இசக்கி மற்றும் காவலர்கள் ரோந்து சென்ற போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்த சக்திவேல் மகன் சங்கர சேகர் (22). என்பவரிடமிருந்து 26 மது பாட்டில்களும், மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிச்சி வாய்க்கால் பாலம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெய்சங்கர் தலைமையில் ரோந்து சென்ற போது சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டனர்.
மகாராஜா நகரை சேர்ந்த கந்தசாமி மகன் அருண்குமார் (34). என்பவரிடமிருந்து 28 மது பாட்டில்களும், தச்சநல்லூர் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகராஜ், தலைமையில் காவலர்கள் ரோந்து சென்ற போது சட்டவிரோத மதுபான விற்பனையில் கங்கைகொண்டானை சேர்ந்த செல்லமுத்து மகன் செல்வநாயகம் (51). என்பவரிடமிருந்து 27 மதுபாட்டில்களும்பறிமுதல் செய்தனர். திருநெல்வேலி மாநகர காவல்துறையினர் இன்று ஒரே நாளில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த மூன்று நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து 81 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















