திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் DSP.சங்கர் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் கிருஷ்ணகுமார், மோகனப்பிரியா மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நத்தம் ரோடு, சந்தைப்பட்டி பகுதியில் கடையில் வைத்தும், பித்தளைப்பட்டி பகுதியில் கடையில் வைத்தும் அரசு அனுமதி இன்றி சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த பித்தளைபட்டியை சேர்ந்த அருண்பாண்டியன்(34). செந்தில்குமார் (45). தோட்டனூத்து இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கந்தசாமி(50). ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 60 பீர் பாட்டில்கள் உட்பட 400 மதுபான பாட்டில்கள், ரூ.1000 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















