இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காவல்நிலைய பகுதியில் வழிப்பறி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட முத்துப்பாண்டி (எ) சேவாக் மீது கடலாடி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இந்நபர் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் பரிந்துரையின் பேரில், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்.IAS., முத்துப்பாண்டி (எ) சேவாக்கை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி