தருமபுரி : தருமபுரி மாவட்டம், அரூர் அருகே கோட்டப்பட்டி மற்றும் பெரியேரி பகுதிகளில் கூட்டமாக சூதாட்டம் நடப்பதாக தருமபுரி காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.புகழேந்தி கணேஷ் அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.சுந்தரமூர்த்தி ,திரு.சக்திவேல், திரு.கமலநாதன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் கோட்டப்பட்டி மற்றும் பெரியேரி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது பெரியேரியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜா முகமது ,.சர்க்கரை கணேசன், சிலம்பரசன், கருணாகரன், குமார், பெரியசாமி , மகர மூர்த்தி, அஜாத், 10).பழனிசாமி,.தனபால், வினோத் குமார், செல்வம் ராஜா, கலையரசன் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 5 டூவீலர்கள், 2 கார், 21 செல்போன்கள் மற்றும் ரூபாய் 5,77,345-/-லட்சம் பறிமுதல் செய்து கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது