கிருஷ்ணகிரி: மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மத்திகிரி வருவாய் ஆய்வாளர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு ஓசூர் To தேன்கனிக்கோட்டை சாலையில் S முதுகானப்பள்ளி கிராம பகுதியில் உள்ள TEAL COMPANY அருகே வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது தேன்கனிக்கோட்டை பக்கமிருந்து ஓசூர் நோக்கி வந்த மூன்று டிப்பர் லாரி வாகனத்தை நிறுத்திய போது வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் தடுக்க வந்த அரசு அதிகாரிகள் மீது உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டி சென்றதாகவும்,சிறிது தூரம் சென்று வாகனத்தின் ஓட்டுநர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டார்கள் எனவும் ஒரு நபரை பிடித்து வைத்து நிறுத்திய வாகனத்தை சோதனை செய்ததில் இரண்டு வாகனங்களில் சுமார் 6 யூனிட் M.Sand, மற்றொரு வாகனத்தில் சுமார் 6 யூனிட் ALL MIX இருந்தது, அனுமதியின்றி ALL MIX ,M.Sand கடத்திய மூன்று வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கொண்டு வந்து ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ஒரு நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்