கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது பாகலூர் சாலையில் உள்ள தும்மனப்பள்ளி கிராமத்தின் அருகே வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது சுமார் 10 யூனிட் M-Sand இருந்தது, வாகனத்தில் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார் எனவும், அனுமதியின்றி M-Sand கடத்தி வாகனத்தை பறிமுதல் செய்து பாகலூர் காவல் நிலையத்தில் ஆஜராகி வாகனத்தை ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
















