தூத்துக்குடி: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவுபடி கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் அவர்கள் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி தலைமையில் உதவி ஆய்வாளர் அரிகண்ணன் மற்றும் போலீசார் நேற்று (14.04.2022) ரோந்து பணியில் ஈடுபட்ட போது கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் சந்தேகத்திற்க்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை.
செய்ததில் அவர் கோவில்பட்டி, இனாம்மணியாச்சி பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் மகேஷ்குமார் (33) என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் எதிரி மகேஷ் குமாரை கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 30,000/- பணத்தையும் 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.