திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் IPS., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து 02.10.2021 தேதி அன்று மட்டும் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 26 நபர்களை TNP Act -ன் கீழ் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 749 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.