திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து 02.01.2022-ம் தேதி முதல் 08.01.2022 தேதி வரை தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 40 நபர்களை TNP Act –ன் கீழ் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 616 பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.