திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில் பழனி DSP. தனஞ்செயன் மேற்பார்வையில் கீரனூர் காவல் நிலைய ஆய்வாளர் சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் மொன்னம்பட்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக சட்டவிரோதமாக லாரிகளில் கிராவல் மண் கடத்தி வந்த பழனியை சேர்ந்த சிவா(29). ரவி(28). மோகன்ராஜ்(28). ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய 3 லாரிகள் மற்றும் 1 பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















