கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஊத்தங்கரை வட்டாட்சியர், துணை வட்டாட்சியர்கள் மற்றும் கல்லாவி உள்வட்ட வருவாய் ஆய்வாளர் ஆகியோர்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் தொலைபேசி தகவலின் படி (27.12.2025) ஆம் தேதி இரவு 07:50 மணிக்கு ஆனந்தூர் ஏரியில் தணிக்கை அலுவலில் இருந்தபோது ஜேசிபி வாகனம் மற்றும் டிப்பர் லாரியில் ஆனந்தூர் ஏரியில் கள்ளத்தனமாக மண் எடுக்கும் பொருட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரண்டு வாகனங்களை நிறுத்தி சோதனை செய்துக்கொண்டிருந்தபோது இரண்டு வாகனத்தின் ஓட்டுநர்கள் தணிக்கைக்கு சென்றவர்கள் மீது வாகனத்தை இயக்க முற்பட்டு வாக்குவாதம் செய்து அரசு வேலையை தடுக்கும் நோக்கத்தோடு மிரட்டி அங்கே வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
(28.12.2025) ஆம் தேதி காலை 06:30 மணிக்கு வட்டாட்சியர், ஊத்தங்கரை என்பவர் போச்சம்பள்ளி காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து இரண்டு குற்றவாளிகளை கைது செய்து மண் கடத்திய இரண்டு வாகனத்தை பறிமுதல் செய்து இரண்டு நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.















