கிருஷ்ணகிரி : அட்கோ காவல் நிலைய பகுதியில் போலீசார், ரோந்து அலுவலில் இருந்த போது குட்கா பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சீதாராம் மேடு கடவுள் நகர் எதிரியின் வீட்டில் சோதனை செய்தபோது ,தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹2,76,430/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்தது. குட்கா பதுக்கி வைத்திருந்த நபரை கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்த அட்கோ காவல் நிலையபோலீசார் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.