கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது மத்திகிரி To தேன்கனிக்கோட்டை ரோட்டில் நாகொண்டப்பள்ளி கிராமத்தின் பஸ் நிறுத்தம் அருகே வந்த இரண்டு வாகனத்தை நிறுத்திய போது வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார் எனவும், நிறுத்திய இரண்டு வாகனத்தை சோதனை செய்தபோது சுமார் 18 யூனிட் ஜல்லி இருந்தது அனுமதியின்றி ஜல்லி கடத்திய இரண்டு வாகனத்தை பறிமுதல் செய்து மத்திகிரி காவல் நிலையத்தில் ஆஜராகி இரண்டு வாகனத்தை ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
















