கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் ஜம்புகுட்டப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு போச்சம்பள்ளி To தர்மபுரி ரோட்டில் உள்ள நோட்ர டேம் பள்ளி அருகே வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்திய போது வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி விட்டு ஓடிவிட்டார் எனவும் நிறுத்திய வாகனத்தை சோதனை செய்ததில் சுமார் 10 யூனிட் ஜல்லி இருந்தது, அனுமதியின்றி ஜல்லி கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கொண்டு வந்து வாகனத்தை ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது .