கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது ஜூ ஜூவாடி சோதனை சாவடி எதிரே உள்ள மேம்பாலம் அருகில், தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த நபரை சோதனை செய்தபோது அந்த நபர் கஞ்சா வைத்திருந்ததாகவும் கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 900 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















