கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புக்க சாகரம் கிராமம் பஸ் நிறுத்தம் அருகில் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சோதனை செய்தபோது சுமார் 1kg 200 கிராம் கஞ்சா இருந்தது. கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்து, அவரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்து குற்றவாளியுடன் நிலையம் வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.