திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், திருமலைக் குமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, சுப்பிரமணியபுரம் பொத்தை அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ராஜேஷ் (28). மற்றும் தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த சுரேஷ் (36). ஆகியோரை சோதனை செய்து பார்த்தபோது, கஞ்சா விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து, அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், வனிதா (பொறுப்பு) வழக்கு பதிவு செய்து ராஜேஷ் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















