கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காவல் நிலைய பகுதியான சுண்டட்டி கிராமத்தில் குற்றவாளிக்கு சொந்தமான நிலத்தில் கஞ்சா பயிர் செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சென்று சோதனை செய்தபோது கஞ்சா பயிர் இருந்தது. கஞ்சா பயிர் செய்த நபரை கைது செய்து, அவரிடமிருந்து சுமார் மூன்று கிலோ கஞ்சா செடிகள் பறிமுதல் செய்து காவல் நிலையம் வந்து வழக்குப் பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.