விருதுநகர்: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் மாவட்ட காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தெ. கண்ணன் அவர்கள் இன்று நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, வாகன சோதனை நடைமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை பார்வையிட்டு, பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கினார். மேலும், தேர்தல் நேரத்தில் சட்ட ஒழுங்கு நிலை பாதுகாக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
















