இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்கவும், தேர்தல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜி. சந்தீஷ், IPS., அவர்கள் தலைமையில் இராமநாதபுரம் உட்கோட்டத்தில் காவல்துறையினர் மற்றும் மத்திய ஆயுதப்படையினர் இணைந்து இந்த கொடி அணிவகுப்பை மேற்கொண்டனர். இந்த அணிவகுப்பின் மூலம் பொதுமக்களிடம் பாதுகாப்பு உணர்வு ஏற்படுத்தவும், அமைதியான தேர்தலை உறுதி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
















