திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், பெரியகுளம் வடக்கு தெருவை சேர்ந்த பழனி சங்கர் (33). மற்றும் சுப்பிரமணியன் (37). சகோதரர்கள்.
பழனி சங்கருக்கும் சுப்பிரமணியனுக்கும் இடையே குடும்பத் தகராறு காரணமாக
(11.05.2025) அன்று சுப்பிரமணியன் பழனி சங்கரிடம் தகராறில் ஈடுபட்டு அவதூறாக பேசி கத்தியால் கையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இது குறித்து பழனி சங்கர் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர், மேதாஜி சிதம்பரம் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை (12.05.2025) அன்று கைது செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாத