திருநெல்வேலி : திருநெல்வேலி முன்னீர்பள்ளம் அருகேயுள்ள முல்லை நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, இருபிரிவுகளைச் சேர்ந்த இளைஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைலகலப்பாக மாறியது. இச்சம்பவத்தில் கருங்குளம், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த பிரகாஷ், ராமையா மகன் பால அருண் (19). புதுக்கிராமம் பகுதியைச் சேர்ந்த இசக்கிபாண்டி (32). மற்றும் சிறுவர்கள் என இருபிரிவுகளைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்