சிறுமிக்கு பாலியல் தொல்லை அக்கா கணவர் போக்சோவில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததை வீடியோவாக எடுத்து வைத்திருந்த அக்காவின் கணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவையைச் சேர்ந்த கூலி வேலை செய்யும் 45 வயது தாயின் கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். அவருக்கு 21 மற்றும் 20 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி உள்ளது. தாயின் இரண்டாவது திருமணத்தில் 13 மற்றும் ஒன்பது வயது மகள்களுடன் இந்நிலையில் இரண்டாவது அக்காவின் கணவர் 9 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் ஈடுபட்டுள்ளார். அவரது மனைவி மொபைல் போனை பார்த்தபோது சிறுமியை ஆபாசமாக படம் எடுத்து வைத்திருந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து தாய் கொடுத்த புகாரின் படி துடியலூர் மகளிர் போலீசார் சிறுமியின் அக்கா கணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையில் போலீஸ் அதிகாரிக்கு கொலை மிரட்டல். 3 பேர் கைது
கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சுப்பிரமணியன் .இவர் நேற்று இரவு குனியமுத்தூர் -பாலக்காடு ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை இரவு ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்கு 3 பேர் நின்று கொண்டு தகராறு செய்தனர் . இதை சுப்ரமணியன் கண்டித்தார் ” இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியத்தை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுப்பிரமணியன் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் .போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த கை மூசா என்ற பெரோஸ் கான், முகமது ரபிக் , ராமன் என்ற ராசு ஆகியோரை கைது செய்தனர் .இவர்கள் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாது தடுத்தல் ,உட்பட 3பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கோவையில் டிரைவருக்கு பீர்பாட்டில் குத்து: 3 பேர் கைது
கோவை சரவணம்பட்டியில் உள்ள வி ஜி ராவ் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மகன் தங்கப்பன் (வயது 18 ) இவர் கோவையில் உள்ள ஒரு கூரியர் சர்வீஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார் – நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அவரது வீட்டின் முன் 3 பேர் உட்கார்ந்து இருந்தனர் . தங்கப்பன் அவர்களிடம் ஏன் இங்கு உட்கார்ந்து இருக்கிறீர்கள்? என்று கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து தங்கப்பனை கல்லால் தாக்கி, பீர் பாட்டிலால் குத்தினார்கள். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது பின்னர் அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி விட்டனர். காயமடைந்த தங்கப்பன் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் தங்கப்பன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கணபதி வி.ஜி.ராவ்நகரைச் சேர்ந்த மணிகண்டன் (வயது18 ) பிரதாப் (வயது 26 ) ரகுபதி (வயது33) ஆகியோரை கைது செய்தனர்.நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்